ஹவுதியின் தொடர் தாக்குதல்; சவுதி பட்டத்து இளவரசருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-நமது நிருபர்-
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்த நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பலத்த பாதுகாப்புடைய அரண்மனைகளுக்குள் ரகசியமாக நடமாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான ஏமனில் அரசுப் படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. இதில், ஏமன் அரசுக்கு ஆதரவாக ஹவுதிகளை குறிவைத்து, சவுதி அரேபிய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹவுதி பயங்கரவாதிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஹவுதி பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல்களால் சவுதி அரேபியாவின், மூன்று முக்கிய விமான நிலையங்களில், விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதுங்கு குழிகள் கொண்ட, பலத்த பாதுகாப்புடைய அரண்மனைகளுக்குள் ரகசியமாக நடமாடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸின் மகனான இவர், தற்போது நாட்டின் பட்டத்து இளவரசராக மட்டுமின்றி, பிரதமராகவும் பதவியில் உள்ளார்.
சவுதி அரேபியாவிடம் உள்ள ஏவுகணை தடுப்பு ஆயுதங்களின் இருப்பு குறைந்து வருகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளிடம் கூடுதல் ராணுவ உதவிகளை கோரியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்
-
நவராத்திரி விழா கோலாகலம்; துர்கா பூஜை ஏற்பாட்டாளர்களுக்கு மே.வங்க முதல்வர் சுவேந்து அறிவுறுத்தல்
-
மேற்கு ஆசிய மோதல் நிலவரம்; ஈரான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளருடன் அஜித் தோவல் போனில் பேச்சு
-
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி: தமிழகத்தில் 2 நாட்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை
-
விஷவாயு தாக்கி கூலி தொழிலாளர்கள் மூவர் பலி விபரீதம்! மழைநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்
-
சவுதி மீது தொடர் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்