இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி: தமிழகத்தில் 2 நாட்களில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகும் என்பதால், அக்.15ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு;
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை விலகி, வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உள்ளன. வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (அக்.13) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனால் அக்.15ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையை இன்று எதிர்பார்க்கலாம். எஞ்சிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஷவாயு தாக்கி கூலி தொழிலாளர்கள் மூவர் பலி விபரீதம்! மழைநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்
-
சவுதி மீது தொடர் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
-
அமெரிக்காவில் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு ரூ.2,641 கோடி வாரி இறைத்த எலான் மஸ்க்!
-
நர்ஸ் அடித்து கொன்று புதைப்பு கள்ளக்காதலனுக்கு 'காப்பு'
-
சாலையில் குட்டையாக தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளாத ஓசூர் ஒன்றிய அதிகாரிகள்
Advertisement
Advertisement