கட்டட ஒப்பந்ததாரரை மிரட்டும் சேலம் வடக்கு த.வெ.க., – எம்.எல்.ஏ.,வின் வீடியோ வைரல்
சேலம்: சேலத்தில், கட்டட ஒப்பந்ததாரரை வடக்கு தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., சிவக்குமார் மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
சேலம் மாநகராட்சி மூக்கனேரி பகுதியில், தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், அந்த பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து விடுவதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து கழிவு நீரும், முறையாக செல்ல வழி இன்றி சாலையில் செல்வதாக வந்த புகாரையடுத்து, கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுத்தது.
இதற்காக, 8 அடி ஆழத்திற்கு பெரிய அளவில் அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாயில், யாரும் விழுந்து விடக்கூடாது என்ற நோக்கில், கால்வாயின் மேல் பகுதியில் சிமென்ட் ஸ்லாப் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த பகுதியில் ஆய்வு செய்வதாக கூறி சென்ற, சேலம் வடக்கு தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., சிவக்குமார், கால்வாயின் மேல்பகுதியில் சிமென்ட் ஸ்லாப் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள ஒப்பந்ததாரரிடம் கடுமையான தகாத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
அதில், ‘நான் ஒரு எம்.எல்.ஏ., நான் நினைத்தால் உங்களை எல்லாம் சிறைக்கு அனுப்பி விடுவேன். சிமென்டு ஸ்லாப்பை உடைத்து எறிந்து விடுவேன்’ என கூறி தகாத வார்த்தையில், அங்குள்ள ஊழியர்களை மிரட்டல் விடுத்தும், ஒப்பந்ததாரரை ஆபாசமாக பேசுவதாகவும், வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள், ‘சாக்கடை கால்வாயில் சிமென்ட் ஸ்லாப் அமைப்பது நல்லது என்றும், எங்கள் பாதுகாப்பிற்குதான் தனியார் நிறுவனம் செய்கின்றனர். மூக்கனேரி பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குழந்தைகள் அதிகளவில் இருப்பதால் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தான், ஸ்லாப் அமைப்பது அவசியமானது’ என்றனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் போன்றவர்களை வெளியே அனுப்பினால் விஜய்க்கு நல்லது. இல்லையெனில் கவிழ்த்து விடுவார்கள்மேலும்
-
மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
-
செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
-
கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்
-
நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
-
குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை