அரசுப்பள்ளி முன் சுற்றி வளைத்த தெருநாய்களால் மாணவியர் பீதி

அந்தியூர்:அந்தியூர் பேரூராட்சியில் சமீபமாக தெருநாய் தொல்லை அதிகரித்து விட்டது. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை சாலையில் திரிந்து, டூவீலர்களில் செல்வோரை, நடந்து செல்வோரை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரேயுள்ள சாலையில் நேற்று மாலை பள்ளி விட்ட நேரத்தில், 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றுகூடி நடுரோட்டில் வலம் வந்தன.

அப்போது பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவிகள், நாயை பார்த்து பயந்து ரோட்டை கடக்க அச்சப்பட்டனர். தைரியத்துடன் சாலையை கடந்த சில மாணவியரை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்க துரத்தியது. இதனால் மாணவியர் பதற்றத்துடன் ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்த போக்குவரத்து போலீசார் நாய்களை விரட்டியடித்தனர். தெருநாய் தொல்லைக்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement