திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்
சத்தியமங்கலம்,:கர்நாடக
மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து தக்காளி லோடு ஏற்றிய ஒரு பிக்-அப்
வேன், மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையில்
நேற்று காலை, 8:30 மணிக்கு, நான்காவது கொண்டை ஊசி வளைவில் வந்தது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது.
டிரைவர் லேசான
காயத்துடன் உயிர் தப்பினார். அதேசமயம் ஆறாவது கொண்டை ஊசி வளைவில்
இரண்டு லாரிகள் பஞ்சராகி நின்றதால் மலைப்பாதையில் போக்குவரத்து
தடைபட்டது.
மதியம், 3:00 மணி வரை போக்குவரத்து நெரிசல்
தொடர்ந்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடை ஏற்றிக்கொண்டு,
மலைப்பாதையில் வாகனங்கள் வருவது மீண்டும் வழக்கமாகி விட்டது. இதனால்
தினமும் விபத்து நடப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம்; கரப்பான்பூச்சி அமைப்பினர் கைது
-
த.வெ.க., அரசின் ஒத்துழைப்பு குறைவால் பணிகள் மந்தம்; ஈரோடு எம்.பி., பேட்டி
-
ஆயுத பூஜைக்கு குவிந்த பூசணி
-
அரசுப்பள்ளி முன் சுற்றி வளைத்த தெருநாய்களால் மாணவியர் பீதி
-
பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்த புலி பவானிசாகர் அருகே கிராம மக்கள் பீதி
-
மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடி போக்குவரத்து ஓய்வூதியர் குமுறல்
Advertisement
Advertisement