தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம்; கரப்பான்பூச்சி அமைப்பினர் கைது

புதுடில்லி: தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, டில்லியில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி அமைப்பினர் முயன்று வருகின்றனர். ஆனால், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

மத்திய அரசு சமீபத்தில் ஜந்தர் மந்தரை அனுமதிக்கப்பட்ட போராட்டக் களப் பட்டியலில் இருந்து நீக்கியது. இந்த சூழலில், தடையை மீறி, ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி அமைப்பின் அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ், அஜின்க்யா ஷிண்டேவை டில்லி போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது நிபந்தனைகளை மீறியது உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, திகார் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement