ஆயுத பூஜைக்கு குவிந்த பூசணி
ஈரோடு:ஆயுதபூஜை
வரும், 19ல் கொண்டாடப்படுகிறது. பூஜையின் போது முழு பூசணிக்காயை
திருஷ்டி கழித்து உடைப்பது வழக்கம். இதையொட்டி ஈரோடு தினசரி காய்கறி
மார்க்கெட்டில், பூசணிக்காய் விற்பனைக்கு குவித்து
வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
இன்றைய
நிலவரப்படி கிலோ ரூ.20க்கு பூசணிக்காய் விற்கப்படுகிறது. 16ல்
விலையில் மாறுபாடு ஏற்படும். கடந்தாண்டு கிலோ ரூ.20 முதல் ரூ.25க்கு
விற்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு 10 நாட்களுக்கு
முன்னதாகவே பூசணிக்காயை விற்பனைக்கு கொண்டு வருவோம்.
இம்முறையும் தற்போது விற்க கொண்டு வந்துள்ளோம். இந்தாண்டு ஆயுத
பூஜை திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. எனவே வெள்ளி கிழமையில்
இருந்து திங்கள் வரை விற்பனை இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு
கூறினர்.
இதேபோல் ஆயுதபூஜையை கொண்டாட பயன்படும் அலங்கார
தோரணங்கள் ஈரோடு கடை வீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இவை பேப்பர்,
பிளாஸ்டிக், துணி உள்ளிட்டவற்றால் தயார் செய்யப்பட்டுள்ளது. இவை
ரூ.100 முதல் பல்வேறு வகையிலான விலைகளில் பல கண்கவர் வண்ணங்களில்
விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்
-
சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் அராம்கோ தலைமையகம் மீது தாக்குதல்; தொடரும் பதற்றம்
-
தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம்; கரப்பான்பூச்சி அமைப்பினர் கைது
-
த.வெ.க., அரசின் ஒத்துழைப்பு குறைவால் பணிகள் மந்தம்; ஈரோடு எம்.பி., பேட்டி
-
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்
-
அரசுப்பள்ளி முன் சுற்றி வளைத்த தெருநாய்களால் மாணவியர் பீதி
-
பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்த புலி பவானிசாகர் அருகே கிராம மக்கள் பீதி