ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவு நிறுவனம் மூலம் கடன் வழங்க முகாம்

சேலம்; தமிழ்நாட்டில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு, ரூ.1,80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில், வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம் மற்றும் கடன் மேளாக்களை நடத்த, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கி-ழமை, சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதி கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமையில், இதர முன்னுரிமைத்-துறை கடன் திட்டங்களுக்கான முகாம்களும் நடத்தப்பட உள்ளன.இதன்படி இன்று (13ம் தேதி) மல்லுார், ஏ என்-புதுார், பி.காளிப்பட்டி, சொக்கநாதபுரம், சின்னகி-ருஷ்ணாபுரம், கெங்கவல்லி மகாலட்சுமி, பெத்த-நாயக்கன்
பாளையம், கச்சுப்பள்ளி,
சித்துார் ஆகிய தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன. மேலும் சேலம் மாவட்ட மத்-திய கூட்டுறவு வங்கியின், மகுடஞ்சாவடி கிளை-யிலும் சிறப்பு கடன் மேளா நடை
பெறுகிறது.
இதில் நடுத்தர கால விவசாய கடன்கள், ஊரக தொழில்கடன், வீட்டுவசதி கடன், வீட்டு
அடமான கடன். மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், திருநங்கையருக்கான கடன், மின் ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமை துறை கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை சென்றடையும் வகையில், மாவட்ட கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்
பட்டுள்ளது.
எனவே தகுதியுடையவர்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் கடன் முகாம்களில், உரியஆவணங்-களுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விபரம் பெற, 98840 00845 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement