நவராத்திரி இரண்டாம் நாள் விழா கோவில்களில் கொலு வைத்து வழிபாடு

கரூர்;நவராத்திரி விழா என்பது, மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபரா-சக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு, பத்தாவது நாளில் அவனை வதம் செய்து வெற்றி பெற்ற-தாக நம்பப்படுகிறது. இதற்காக, நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நவராத்திரி விழா, நேற்று முன்-தினம் தொடங்கியது. இதையொட்டி, கரூர் மாவட்டத்தில் வீடுகளில் கொலு வைத்து வழிபட தொடங்கினர். இதேபோல், கோவில்களிலும் கொலு வழிபாடு தொடங்கியது.நேற்று இரவு இரண்டாவது நாளையொட்டி, கரூர் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், கொலு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நவ-ராத்திரி விழாவுக்காக கொலு அமைக்கப்பட்டுள்-ளது.

Advertisement