விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் கூலி உயர்வு கேட்டு பிரசார இயக்கம்
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில் தீபாவளி பண்டிகைக்கு போனஸ், விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிர-சார இயக்கம் நடத்தினர்.
மூத்த நிர்வாகி செல்வபெருமாள் தலைமையில், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் பிரசார இயக்கத்தை துவக்கி வைத்தார். விசைத்தறிக்கு நுால் விலையை கட்டுப்படுத்த வேண்டும். உற்பத்தி-யாகும் துணிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை, 1,500 யூனிட்-டாக உயர்த்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு, 8 மணி நேர வேலை உத்தரவாதம் கொடுக்க வேண்டும். மாதம், 26 ஆயிரம் சம்பளம் வழங்கு-வதை உறுதிப்படுத்த வேண்டும். 60 வயது நிறை-வடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் மாதம், 3,000 வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து ஆண், பெண் தொழிலா-ளர்களுக்கு சதவீத அடிப்படையில் கூலி உயர்வு, 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
குமாரமங்கலத்தில் துவங்கிய பிரசார இயக்கம் எட்டிமடை புதுார், குமரன் கல்வி நிலையம், கைலாசம்பாளையம், செங்கோடம்பாளையம், நெசவாளர் காலனி, சட்டையம்புதுார், சூரியம்பா-ளையம் வழியாக சென்று தேவனாங்
குறிச்சியில் நிறைவு பெற்றது.
மேலும்
-
கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை
-
சப்த கன்னியர் தேவிகளுக்கு 756 சங்காபிேஷகம்
-
ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
-
கல்லுாரி பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு
-
சேலத்தில் கனரா வங்கி சார்பில் அரசு ஊழியர்களுடன் கலந்துரையாடல்
-
கத்தியை காட்டி நகை வழிப்பறி வாலிபருக்கு 33 மாத சிறை