காவிரி ஆற்றில் மணல் கடத்தல்: மின்கம்பம் சாயும் அபாயம்
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே பிலிக்-கல்பாளையம் காவிரி ஆற்றுப் படுகையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மினி ஆட்-டோக்கள் மூலம் சட்டவிரோதமாக மணல் அள்-ளப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்சாரக் கம்-பத்தின் மிக அருகிலேயே அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் மின் கம்பத்தின் அடித்தளம் பலமிழந்து, எந்த நேரத்திலும் கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உரு-வாகியுள்ளதால், அப்பகுதியினர் மிகுந்த அச்-சத்தில் உள்ளனர்.
தினசரி இரவு, 11:00 முதல் அதிகாலை, 3:00 மணி வரை இத் திருட்டுச் செயல் தொடர்ச்சியாக அரங்-கேறி வருகிறது. ஆற்றில் இருந்து அள்ளப்படும் மணல், மினி ஆட்டோக்கள் மூலம் பொன்மலர்-பாளையம் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநியோகம் செய்-யப்படுகிறது. மணல் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக அப்
பகுதி மக்கள் ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். மேலும், காவிரி ஆற்றுக்குள் கடத்தல் வாகனங்கள் புகு-வதைத் தடுக்க பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டி தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றும், தொடரும் மணல் திருட்டைத் தடுத்து விபத்து அபாயத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வா-கமும், போலீசாரும் போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'