ரூ.5.45 கோடியில் கூடுதல் கட்டடம்: பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
படம் உள்ளது
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பொது, மகப்பேறு, பச்சிளம் சிசு பராமரிப்பு, முடநீக்கியல், கண், பல் மற்றும் சித்தா உள்ளிட்ட பிரிவுகளில் தினசரி 1,300க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும்; 300க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இட நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ. 5.45 கோடி மதிப்பில், லிப்ட் வசதியுடன் கூடிய 5 அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டது.
இதில், முதல் தளத்தில் டயாலிசிஸ், 2வது தளத்தில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு, 3வது தளத்தில் முடநீக்கியல் அறுவை அரங்கம், 4வது தளத்தில் ரத்த வங்கி, 5வது தளத்தில் கூட்ட அரங்கு மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கான பயிற்சி அறை என முடிவு செய்யப்பட்டது.
இந்த கட்டடத்தை, கடந்த பிப்., 6ல், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஆனால், கடந்த மாதம், முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவு மட்டுமே செயல்பட துவங்கியது.
ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக புதிய கட்டடத்தில் மின் இணைப்புக்கு தாமதம், தண்ணீர் சப்ளை இல்லாதது போன்ற காரணங்களால் ஏழு மாதங்களுக்கு மேலாகியும் புதிய கட்டடத்தில் மருத்துவ சேவை முழுமை பெற முடியாத நிலையே தொடர்கிறது.
இதனால் ரூ.5.45 கோடியில் ஐந்து அடுக்குமாடி கட்டடம் கட்டியும் மருத்துவர்கள், ஊழியர்கள் இட நெருக்கடியுடன் பணிபுரியும் அவலம் தொடர்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்து, புதிய கட்டடத்தில் அனைத்து தளங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்