அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கல்
கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுத் தேர்வு முடிவுகளில் அரசு உயர்நிலைப் மற்றும் மேல்நிலைப் பள்ளியின் நிலையை மேலும் உயர்த்தும் பொருட்டு மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு நீலமங்கலம் ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிதி உதவி மூலம் கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டர் பத்மஜா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கற்றல் கையேடுகள் வழங்கினார்.
வங்கி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement