மேகமலை காப்பகத்தில் கணக்கெடுப்பில் 12 புலிகள்
தேனி: ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 2022 கணக்கெடுப்பு படி 12 புலிகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தின் 63,000 எக்டேர் வனப்பகுதி உள்ளது. இதுநாட்டின் 51வது புலிகள் காப்பகமாகும். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மேகமலை புலிகள் காப்பக பகுதியில் 18 புலிகளின் புகைப்படங்கள் கணக்கெடுப்பின்போது பதிவானது. அவற்றில் உடல் தோற்றம் போன்றவற்றை ஆராய்ந்தபின் 12 புலிகள் இருப்பது 2022ல் உறுதி செய்யப்பட்டது. புலிகள் சராசரியாக 60 முதல் 100 கி.மீ., வரை எல்லையை கொண்டு இருக்கும். அருகே உள்ள புலிகள் தேனி மாவட்ட எல்லைக்குள் வந்து செல்லும். 2026 ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு இவ்வாண்டு துவக்கத்தில் நடந்து முடிந்தது. அம்முடிவுகள் 2027 மே மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும். இதில் புலிகள் எண்ணிக்கை 30ஐ எட்ட வாய்ப்பு உள்ளது. புலிகள் பாதுகாப்பது என்பது, வன அழிவை தடுக்கும் முக்கிய பணி. புலிகள் எண்ணிக்கை குறைந்தால் உணவுச் சங்கிலியில் தடை ஏற்பட்டு, மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்றனர்.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்