கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
தொண்டி: தொண்டி கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. மீன்பிடி தொழில் மற்றும் வணிக போக்குவரத்திற்கு இந்த சாலை பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆங்காங்கே சாலை ஓரக் கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது குறித்து மக்கள் சட்ட உரிமைக் கழகத்தை சேர்ந்த நாசர்கான் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை ஓரக் கடைகளால் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் கேட்கிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. உடனே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்