ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தால் 2 கி.மீ. துாரம் சுற்றுவது மிச்சமாகும்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பாரி கம்பெனி பகுதி முழுவதும், தடுப்பு சுவர் அமைத்தால், ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் செல்ல சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வசந்தம் நகர், முல்லை நகர், ராயல் ஸ்கொயர் நகர் ஆகிய பகுதிகள் குடியிருப்போர் நல சங்க சார்பில், நிர்வாகிகள் கூட்டம் தாசம்பாளையம் சாலை முல்லை நகரில் நடந்தது. இதில் சங்க செயலாளர் நசீரா, பொருளாளர் ஆறுமுகம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன. தற்போது தாசம்பாளையம் செல்லும் பகுதியில் உள்ள, 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள், தினமும் பாரி கம்பெனி லே அவுட் வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று வருகின்றனர். தற்போது பாரி கம்பெனி வழியில் சுவர் அல்லது கம்பி கேட் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் 10 நிமிடத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் தூரத்தை,காட்டூர் ரயில்வே கேட் வழியாக இரண்டு கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஊட்டிக்கு மலை ரயில் செல்ல கேட் போட்டால், திறக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் பொதுமக்களும், ரயில் பயணிகளும் பாதிப்பு அடைவர். எனவே ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல, சுரங்கப்பாதை அல்லது நடைபாதை மேம்பாலம் ஆகியவை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்மானங்களை, பிரதமர் முதல்வர், ரயில்வே அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., தென்னக ரயில்வே மேலாளர், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
மேலும்
-
வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் மாநகராட்சி மீது தீர்ப்பாயம் அதிருப்தி
-
சிறப்பு பக்கத்திற்கு................. மின்வெட்டு ஏற்படுவது உண்மையா? தமிழக அரசு ரகசிய கண்காணிப்பு
-
பட்டாக்களில் தொடரும் பிழைகளுக்கு 26 ஆண்டுக்கு பின் வருகிறது விமோசனம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி
-
பட்டாசுகள் கையாள்வதில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
-
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமான பொருட்கள் சப்ளை: கேரள முதல்வர் சதீசன் தகவல்