அரசு மருத்துவமனை கட்டடங்களுக்கு வயசாகிப்போச்சு: மாற்று ஏற்பாடு இல்லாததால் நெருக்கடி
கோவை: அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய ஓபி., கட்டடம் கட்டி, 60 ஆண்டுகளுக்கு மேலானதோடு, மேல்தளமும் பழுதடைந்ததால் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கார் பார்க்கிங் வசதியுடன், ஐந்து மாடி புதிய கட்டடத்திற்கு, பொதுப்பணித்துறை அரசுக்கு கருத்துரு சமர்ப்பித்துள்ளது.
அங்கு இருந்த துறைகள், மற்ற கட்டடங்களுக்கு மாற்றப்பட்டன. புதிய நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க, உதவி மையம் அமைக்கப்பட்டது.
கட்டி 80 ஆண்டுகளுக்கு மேலான எம்.எம்.1 மற்றும் எம்.எம்.2 பிரிவு கட்டடங்களையும் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு, பொது மருத்துவப்பிரிவுக்கு வரும் உள் நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது. எக்ஸ்ரே, ஸ்கேன், எம்.ஆர்.ஐ.,வசதிகளும் உள்ளன. மூன்று அறுவை சிகிச்சை அரங்குகளுடன், 250 படுக்கை வசதிகள் உள்ளன.
இவ்விரு பிரிவு கட்டடங்களையும் இடித்தால், மாற்று ஏற்பாட்டிற்கு மருத்துவமனை வளாகத்தில் வேறு கட்டடங்கள் இல்லை. இதனால் கட்டடத்தின் தரம் குறித்து, பொதுப்பணித்துறை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
‘பழைய ஓபி., கட்டடத்தை இன்னும் முழுமையாக இடிக்கவே இல்லை. அரசு நிதி ஒதுக்காமல், பொதுப்பணித்துறை வேலை செய்யாது. எம்.எம்., 1,2 கட்டடங்களையும் இடித்தால், கடும் இட நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே, அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், 550 படுக்கை வசதிகளுடன் கூடிய ஐந்து மாடி கட்டடத்திற்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. புதிய கட்டட வசதி ஏற்படுத்தாமல், பழைய கட்டடங்களை இடிப்பது சாத்தியமில்லை’ என்கின்றனர், அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிலர்.
@quote@எம்.எம்.1, 2 கட்டடங்கள் கட்டி 80 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அவற்றை உடனடியாக இடிக்க முடியாது. நுாற்றாண்டு கட்டடத்தில் டவர் 1,2 ல், 4 தளங்களுடன் கூடுதலாக 5, 6வது தளம் கட்டினால் தான், மாற்று வசதி ஏற்படுத்த முடியும். அதுவரை சமாளிக்க வேண்டியதுதான்.
- டாக்டர் சரவணபிரியா
ஆர்.எம்.ஓ.,quote
மேலும்
-
ரூ. 3 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை
-
மனைவி மாயம் கணவர் புகார்
-
அரசு ஊழியர் சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
-
தையல் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
பட்டம் வினாடி – வினா கல்வி கற்றால் எதையும் சாதிக்கலாம் மாணவர்களுக்கு தாசில்தார் ‘அட்வைஸ்’
-
பட்டம் வினாடி – வினா மாணவர்களின் திறவுகோள் ‘பட்டம்’ இதழ் தவஅமுதம் பள்ளி முதல்வர் ‘பளீச்’