பழங்குடியினர் வீடுகள் புதுப்பிப்பு

பெ.நா.பாளையம்: ஆனைகட்டி அருகே கோபனாரி மலை கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பழுதான வீடுகள், செப்பனிடப்பட்டு, மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆனைகட்டி அருகே கோபனாரி மலை கிராமத்தை பார்வையிட்ட கோயம்புத்தூர் ரோட்டரி ஜெனித் சங்கத்தினர், அந்த கிராமத்தை தத்தெடுத்து, கிராமத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன் வந்தனர். முதல் கட்டமாக அங்கு சேதம் அடைந்திருந்த, 4 ஓட்டு வீடுகளை, 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்தனர். மேலும், சோலார் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுத்தனர்.

வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 4 பயனாளிகளுக்கும் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. விழாவையொட்டி அனைத்து மலைவாழ் மக்களும், தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.

விழாவில், மலைவாழ் மக்கள் பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தும், நடனமாடியும், கைகளால் செய்த பூங்கொத்துகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.

Advertisement