ஆயுதபூஜையை முன்னிட்டு செவ்வந்திபூ விலை உயர்வு
கோவை: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு, கோவை பூமார்க்கெட்டில் செவ்வந்தி பூ விலை உயர்ந்துள்ளது.
வழக்கமாக 50 முதல் 60 டன் உதிரி பூக்கள் தினமும் விற்பனைக்கு வருவது வழக்கம். பண்டிகையை முன்னிட்டு 100 டன் உதிரி பூக்கள் விற்பனைக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூமார்க்கெட் வியாபாரி அபுதாகிர் கூறுகையில், ‘‘இந்த மாதத்தில் முகூர்த்தம் இல்லை. அதனால் பூ விற்பனை விற்பனை பெரியளவில் இல்லை. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை வருவதால் பூ விற்பனை அதிகரித்துள்ளது. இந்த பண்டிகையை பொறுத்தவரை செவ்வந்தி பூக்கள்தான் அதிகம் விற்கபனையாகும். மற்ற பூக்கள் அதிகம் விற்பனை இருக்காது.
செவ்வந்தி கிலோ 240 முதல் 320 ரூபாய் வரை விற்பனையாகிறது. மல்லி, ஜாதிமல்லி கிலோ 600 ரூபாய்க்கும், முல்லை 480 ரூபாய்க்கும், அரளி 320 ரூபாய்க்கும், ரோஸ் 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இன்னும் இரண்டு நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,’’ என்றார்.
மேலும்
-
‘தினமலர்’ அ.. ஆ.. அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் 20ம் தேதி கோலாகலம்: விஜயதசமி திருநாளில் வித்யாரம்பத்திற்கு தயாராகுங்கள்
-
சுப்ரமணிய பாரதி பள்ளியில் தனித்திறன் கண்காட்சி
-
ஒவ்வொருக்கும் தேசநலன் முக்கியம்: விட்டல் தாஸ் மகராஜ்
-
பள்ளிகளில் கேக்கிற்கு பதில் கடலைமிட்டாய் வழங்க உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்
-
பின்னலாடை தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் பதிவாகுமா?
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு பொதுமக்கள் முற்றுகை