தாமிரபரணி கரையில் ஒரே நாளில் 5,000 பனை விதைகள் நடவு
திருநெல்வேலி: ஆலடியூர் தாமிரபரணி ஆற்றின் வடகரையில், ஒரே நாளில், 5,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தாமிரபரணி ஆற்றில், பக்தர்கள் வீசும் பழைய துணிகளைச் சேகரித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் புள்ளியியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி மூர்த்தியின் முயற்சியில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி கலெக்டர் ஆனந்த் மோகன் வழிகாட்டுதலின்படி, சேரன்மகாதேவி சப் -– கலெக்டர் ஆயுஷ் குப்தா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பனை விதைகளை நட்டனர்.
பனை மரங்களால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து, மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமையாசிரியர் அந்தோணிசாமி அடிகள், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
மழைநீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு
-
‘தினமலர்’ அ.. ஆ.. அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் 20ம் தேதி கோலாகலம்: விஜயதசமி திருநாளில் வித்யாரம்பத்திற்கு தயாராகுங்கள்
-
சுப்ரமணிய பாரதி பள்ளியில் தனித்திறன் கண்காட்சி
-
ஒவ்வொருக்கும் தேசநலன் முக்கியம்: விட்டல் தாஸ் மகராஜ்
-
பள்ளிகளில் கேக்கிற்கு பதில் கடலைமிட்டாய் வழங்க உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்
-
பின்னலாடை தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் பதிவாகுமா?