குப்பை கொட்டிய 7 பேருக்கு அபராதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரிக்கின்றனர். இதில் மக்கும் குப்பைககளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனாலும் சில இடங்களில் குப்பைக்கழிவுகளை பொதுவெளியில் கொட்டிச்செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த் உத்தரவின் பேரில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே கக்கன் நகர் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு ரோட்டோரம் குப்பை கொட்டிய தனியார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம், மேலும் 6 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
இதுபோல் மாநகராட்சி முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
‘தினமலர்’ அ.. ஆ.. அரிச்சுவடி ஆரம்பம் புதுச்சேரியில் 20ம் தேதி கோலாகலம்: விஜயதசமி திருநாளில் வித்யாரம்பத்திற்கு தயாராகுங்கள்
-
சுப்ரமணிய பாரதி பள்ளியில் தனித்திறன் கண்காட்சி
-
ஒவ்வொருக்கும் தேசநலன் முக்கியம்: விட்டல் தாஸ் மகராஜ்
-
பள்ளிகளில் கேக்கிற்கு பதில் கடலைமிட்டாய் வழங்க உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்
-
பின்னலாடை தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் பதிவாகுமா?
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு பொதுமக்கள் முற்றுகை
Advertisement
Advertisement