கஞ்சா செடியுடன் இரு சிறுவர்கள் கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சீதப்பால் ஆரன்குழி பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது இரு சிறுவர்கள் கையில் பையுடன் வந்தனர். போலீசை கண்டதும் கையில் இருந்த பையை போட்டுவிட்டு ஓட முயன்றனர்.
அவர்களை பிடித்த போலீசார் விசாரணை செய்த போது பைக்குள் கஞ்சா செடி இருந்தது. பிளாஸ்டிக் டப்பாவில் அந்த செடி வளர்க்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு பாதியில் நின்றவர். மற்றொருவர் 11-ம் வகுப்பு படிக்கிறார். இருவரும் 15, 16 வயது நிரம்பியவர்கள் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement