மாணவர்களுக்கு முடி திருத்தம்: சிங்கப்பெண் போலீசார் துரிதம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் சிங்கப்பெண் போலீசார், மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்து பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் நிலைய நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருந்த மூன்று மாணவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில், விடுதியில் தங்கி விழுப்புரம் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பதாக மாணவர்கள் கூறினர். மேலும், ஆசிரியர்கள் பலமுறை கூறியும் முடி திருத்தம் செய்யாததால் பள்ளிக்கு சென்றால் திட்டுவார்கள் என்று பயந்து பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் மாணவர்களை சலுான் கடைக்கு அழைத்து சென்று முடி திருத்தம் செய்தனர். பின், பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் தலைமை ஆசிரியரை, போலீசார் சந்தித்து விவரத்தை கூறினர். தொடர்ந்து, பள்ளி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
ரயில் மோதி முதியவர் பலி
-
குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நகைகள் அணிவகுப்பு
-
பெண்களின் மனம் கவரும் கடலுார் அழகப்பா நகை மாளிகை
-
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம் :மாநகராட்சி மீது மக்கள் புகார்
-
போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
-
மேலாளரிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி செய்தவர் கைது