‘சில்மிஷ’ ஆசிரியருக்கு 5 ‘ஆண்டு’

திருச்சி: மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆசிரியருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி, பாலக்கரை, தர்மநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் சூசைநாதன், 56. இவர், ஜீயபுரம் அருகே உள்ள போதாவூர் அரசு துவக்கப்பள்ளியில், ஆசிரியராக பணியாற்றினார். இவரது வகுப்பில் படித்த, 7 வயது மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஜீயபுரம் போலீசார், ‘போக்சோ’வில், ஜெயராஜ் சூசைநாதனை கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், ஜெயராஜ் சூசைநாதனுக்கு, 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து, நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

Advertisement