குப்பைகள் பிரித்து வழங்கும் பணி: நகராட்சி கமிஷ்னர் 'திடீர்' ஆய்வு
திண்டிவனம்: நகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி குப்பை சேகரிக்கும் பணியை கமிஷனர் பார்வையிட்டார்.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி நகராட்சி பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உருவாகும் திடக்கழிவுகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்புக்கவனிப்பு கழிவு என கழிவுகளை அதன் மூலத்திலேயே பிரித்து, முறையே பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு நிற தொட்டிகள் அல்லது பைகளில் சேமித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உருவாகும் திடக்கழிவுகளை, 4 வகையாகப் பிரித்து வழங்கும் பணி நேற்று நகராட்சி பகுதியில் நடந்தது. நகராட்சி கமிஷ்னர் பானுமதி தலைமையில் குப்பைகள் பிரித்து வழங்கும் பணி நடைபெற்றது. அவர் அந்த பணியை ஆய்வு செய்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் உதவி பொறியாளர் பாண்டு, நகர அமைப்பு அலுவலர் திலகவதி, துப்பரவு அலுவலர் செந்தில்குமார், துப்பரவு ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ரயில் மோதி முதியவர் பலி
-
குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நகைகள் அணிவகுப்பு
-
பெண்களின் மனம் கவரும் கடலுார் அழகப்பா நகை மாளிகை
-
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம் :மாநகராட்சி மீது மக்கள் புகார்
-
போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
-
மேலாளரிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி செய்தவர் கைது