பட்டம் வினாடி – வினா கல்வி கற்றால் எதையும் சாதிக்கலாம் மாணவர்களுக்கு தாசில்தார் ‘அட்வைஸ்’

ஸ்ரீமுஷ்ணம்: கல்வி கற்றால் தான் எதையும் னைத்தையும் சாதிக்க முடியும்; மாணவர்களுக்கு தாசில்தார் ‘அட்வைஸ்’

ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பதின்ம பள்ளியில் நடந்த ‘தினமலர் –பட்டம்’ இதழ் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினரான ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் செம்மனசெல்வி ேபசியதாவது:

நன்றாக படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். கல்வி கற்றால்தான் நீங்கள் நினைத்த அனைத்தையும் சாதிக்க முடியும். எந்த தருணத்திலும் கல்வி நமக்கு கைகொடுக்கும். ஆகவே, மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்தாமல் தொடர்ந்து படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மற்றவர்கள் மதிக்கும்படி வாழ்வதற்கு கல்விதான் முக்கியம் என்றார்.

Advertisement