ரூ. 3 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை
திருவெண்ணெய்நல்லூர்: பானையில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் வீடு புகுந்த திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி பழனியம்மாள், 60; கூலி தொழிலாளி. இவரிடம் மகள் சவுமியா, ரூ.3 லட்சத்தை கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ள சொன்னார்.
பணத்தை பெற்றுக் கொண்ட பழனியம்மாள் வீட்டில் உள்ள பானையில் வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த, 7ம் தேதி பானையை பார்த்தபோது பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த பழனியம்மாள் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் உதவியுடன் திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற சப்–இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
23 நாட்களாக தண்ணீர் வரல... கடுப்பான இடுவாய் மக்கள் சாலை மறியல் செய்து ஆவேசம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை விண்ணப்பித்தும் லேட்டாவதாக புகார்
-
நஞ்சுண்டாபுரம் அபார்ட்மென்டில் குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவு
-
உலக செய்தி சில வரிகளில்
-
பாலியல் புகாரில் சிக்கிய காங்., – எம்.பி., மீது நடவடிக்கை கோரி ஜனாதிபதியிடம் மனு
-
நீண்டகால போராட்டத்திற்கு தயாராகிறதா டில்லி? உள்துறை அமைச்சகத்துக்கு டில்லி போலீஸ் கடிதம்