தையல் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: தீபாவளி பண்டிகை உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி தையல் கலைஞர்கள் சங்கம் ( சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி சட்டசபை அருகில் உள்ள சமூக பாதுகாப்பு வாரியம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் (சி.ஐ.டி.யூ) சீனிவாசன், மாநில செயலாளர் மணிபாலன் முன்னிலை வகித்தனர்.

தியாகராஜா, மதிவாணன், விஜயகுமார் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தையல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கடந்த 2025–26ம் ஆண்டு சமூக பாதுகாப்பு வாரியத்தில் உறுப்பினர் பதிவுக்காக விண்ணப்பித்துள்ள தையல் தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவு செய்த அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நலத்திட்ட உதவிகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement