பட்டம் வினாடி – வினா மாணவர்களின் திறவுகோள் ‘பட்டம்’ இதழ் தவஅமுதம் பள்ளி முதல்வர் ‘பளீச்’

ஸ்ரீமுஷ்ணம்: ‘தினமலர்’ நாளிதழ் எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது என ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதலம் பள்ளி முதல்வர் புனிதவள்ளி பேசினார்.

ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பதின்ம பள்ளியில் நடந்த ‘பட்டம் வினாடி – வினா’ நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் புனிதவள்ளி பேசுகையில், ‘தினமலர்’ நாளிதழ் எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. தமிழை ஆர்வமாக கற்பவர்கள், பிழையில்லாமல் கற்பதற்கும், சங்க இலக்கியங்களை கற்பதற்கும் ‘பட்டம்’ இதழ் பெரிதும் உதவுகிறது.

ஆங்கில இலக்கியத்தையும் இலக்கண நடையோடு ‘பட்டம்’ இதழ் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

அறிவியலில், நேற்றைய நிகழ்வுகள் வரை தொகுத்து வழங்கி வருகின்றனர். அறிவியில் கண்டுபிடிப்புகளுக்கு மூலகாரணம் யார் என்பதை தெரிந்து கொள்ளவும் ‘பட்டம்’ இதழ் பெரிதும் உதவுகிறது.

நான் பிறந்தேன், மடிந்தேன் என்பதல்ல வாழ்க்கை. நான் பிறந்தபின் இந்த மண்ணில் என்ன தடம் பதித்தேன் என்று யோசிக்க வைக்கும் ‘பட்டம்’ இதழுக்கு நன்றி.

வரலாறு எப்படி சுவாரிசியமாக எடுத்து செல்ல முடியும் என்பதற்கு ‘பட்டம்’ இதழ் உதவும். மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பதற்கான திறவுகோலாக ‘பட்டம் இதழ்’ உள்ளது. என்றார்.

Advertisement