வங்கியில் ரூ.1 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர்கள் கைது

1

வேலுார்: வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து, ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்கள் பார்த்திபன், 32, சீனிவாசன், 55, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், காவனுாரில் உள்ள 'பேங்க் ஆப் பரோடா' வங்கியில், சின்ன வடுகங்தாங்கலை சேர்ந்த பார்த்திபன், கீழ் முட்டுகூரை சேர்ந்த சீனிவாசன், ஆகியோர், 15 ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளராக இருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஏற்கனவே நகை அடகு வைத்திருந்த நண்பர்கள், உறவினர்கள் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, 16 நகை கடன்களை பயன்படுத்தி, 1,080 கிராம் எடையுள்ள போலி நகைகளை அடகு வைத்துள்ளனர். இதன் மூலம், 1 கோடியே 7 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிக்கு, சீனிவாசன் உதவியாக இருந்துள்ளார்.

அதிகாரிகள் ஆய்வில், போலி நகைகளை அடகு வைத்து, இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

வங்கியின் மண்டல மேலாளர் யாசின் பாஷா, 46, புகாரில், வேலுார் போலீசார், வழக்கு பதிந்து, பார்த்திபன், சீனிவாசனை நேற்று கைது செய்தனர்.

Advertisement