ஆக்கிரமிப்பு பிடியில் 1700 எக்டேர் வனப்பகுதி: வன அலுவலர் தகவல்

தேனி: மாவட்டத்தில் போடி, பெரியகுளம், தேனி, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, கூடலுார், வருஷநாடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்கள் உள்ளன. அவற்றை மாவட்ட வன அலுவலர் கிரண், தலைமையில் ரேஞ்சர்கள் நிர்வகிக்கின்றனர். கரட்டுக்காடு, சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாத்தல், உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஆய்வு செய்து அனுமதி வழங்குதல், வன வேட்டை தடுத்தல், வன உரிமைகளை பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். மாவட்டத்தில் சுமார் 1700 எக்டேர் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார். சுமார் 600க்கும் மேற்பட்டோர் வீடு, விளைநிலம், வணிக பயன்பாடுகளுக்கு என ஆக்கிரமித்துள்ளனர். போடி வடக்கு மலை, பெரியகுளம், தேனி வனப்பகுதிகள் அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement