ஆந்திரா ஸ்பெஷல் சாப்பாடு; திருப்பதியில் தரிசனம்; ஆய்வு கூட்டம் இல்லாததால் தமிழக அதிகாரிகள் ஜாலி
சென்னை: ஆய்வு கூட்டம் இல்லாததால், விஜயவாடாவில், ஆந்திரா ஸ்பெஷல் உணவுகளை ஒரு பிடி பிடித்து விட்டு, திருப்பதியில் சிறப்பு தரிசனம் முடித்து, தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் நிம்மதியாக சென்னை திரும்பியுள்ளனர்.
தமிழகம் - ஆந்திரா இடையே மேற்கொள்ளப்பட்ட தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, 11 டி.எம்.சி., நீர் திறக்கப்பட வேண்டும்.
இந்த நீர், பூண்டி ஏரிக்கு கால்வாய் வழியாக எடுத்து வரப்பட்டு, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கால்வாய் வழியாக அனுப்பபடுகிறது. தமிழக அரசிடம் இருந்து ஆண்டுதோறும் 100 கோடி ரூபாயை, கால்வாய் பராமரிப்பு கட்டணமாக, ஆந்திரா பெற்று வருகிறது. ஆனால், முறைப்படி நீரை திறப்பது இல்லை.
நடப்பாண்டு வழங்க வேண்டிய நீரில், மூன்று டி.எம்.சி., மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. நிலுவை நீரை வழங்காமல், அணையில் நீர் திறப்பை ஆந்திர அரசு நிறுத்தி விட்டது. எஞ்சியுள்ள நீரை பெறும் வகையில், ஆந்திர முதல்வரிடம் பேச்சு நடத்த, 13ம் தேதி முதல்வர் விஜய் விஜயவாடா சென்றார்.
அவர் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் மாரியப்பன், கிருஷ்ணா நீர் வழங்கும் பிரிவு செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், டிரைவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் குழுவினர் விஜயவாடா சென்றனர்.
தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்ட நீர் விபரங்கள், அதற்காக வழங்கப்பட்ட பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட தகவல்களை அறிக்கையாக தயாரித்து எடுத்துச் சென்றனர். ஆய்வு கூட்டத்தில், இதை முதல்வர் விஜய் வாசிக்கும் வகையில் தயாரிப்பு செய்யப்பட்டது.
முதல்வர் விஜய், தன் ஆலோசகர், உதவியாளர் உள்ளிட்டோருடன் தனி விமானத்தில், விஜயாவாடா சென்றார். அதற்கு முன்பாக, டில்லியில் இருந்து நீர்வளத் துறை செயலர் பிரசாந்த் வடநேரே, பன்மாநில நதிகள் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர், விமானத்தில் விஜயவாடா சென்றனர். முதல்வரின் அரசு செயலர்களும், விமானத்தில் அங்கு சென்றனர்.
ஆனால், அதிகாரிகள் எதிர்பார்த்ததுபோல ஆந்திர முதல்வரின் முகாம் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் எதுவும் நடக்கவில்லை. சந்திரபாபு நாயுடுவுடன், முதல்வர் விஜய் ஒரு மணி நேரம் பேசினார்.
பின், விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, அன்றிரவு சென்னை திரும்பி விட்டார். இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள், விஜயாவாடாவில் ஆந்திரா ஸ்பெஷல் உணவுகளை சாப்பிட்டுவிட்டு, திருப்பதி சென்று விட்டனர். வெங்கடாஜலபதியை நேற்று காலை தரிசனம் செய்த நிம்மதியோடு, நேற்று பிற்பகல் சென்னை திரும்பினர்.
ஓகே ஓகே,வாட் அபௌட் வாட்டர் ?
விஜய்வாடா ஊரின் பெயரை ஆந்திர அரசு மாற்ற வேண்டும். மரியாதை குறைவாக வாடா, போடா என்று சொல்வது போல் உள்ளது.
தவறு நடக்கும்போது கண்டுகொள்ளாமல் உறங்க வேண்டியது. சிக்கல் முற்றி நடுத்தெருவிற்கு வரும்போது தான் நானும் வேலை செய்கிறேன் என்று அரசு செலவில் சுற்றுலா போக வேண்டியது. மூக்கு முட்ட நன்றாக தின்றுகொழுத்து குறட்டைவிட்டு தூங்குவதோடு, வெளியூர் வெளிமாநிலங்களில் சென்று தமிழ்நாட்டின் மானத்தை வாங்க வேண்டியது... ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்று தெரிந்துகொள்ளாமல் ஐந்தறிவு பிராணிகள் போல் ஒரு வாழ்க்கை... வெளியில் அரசாங்க உத்யோகம் என்று பீற்றல் வேறு.... ச்சீ லகட பாண்டிகளா
என்னங்கடா இது? கொத்து புரோட்டா ஆந்திரா சிக்கன் பிரியாணி காட ரோஸ்ட் வஞ்சரம் மீன் வறுவல் ஆட்டுக்கால் பாயா நண்டு சூப் 3 கலக்கி ஐஸ்கிரீம் வித் ஜாமூன் என தின்னுட்டு வர வேண்டியதுதானே தமிழனை அசிங்கப்படுத்தாதீங்கடா ஆபீசர்களா
மக்களின் வரிப்பணம் , GST க்கு எதிரா பொங்கும் கோமாளிகள் இப்போ enge?மேலும்
-
இளைஞர்களை அராஜகத்தில் தள்ளி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி; ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
பெயரை கூட ஏற்க முதல்வர் விஜய்க்கு மனமில்லையா? கேட்கிறார் உதயநிதி
-
போதைப்பொருள் விற்பனையை தடுத்த சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பஞ்சாப் அரசிடம் அறிக்கை கேட்கிறார் அமித் ஷா
-
சவுதி அரேபியாவில் நீடிக்கும் பதற்றம்; அக்.,20 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து
-
சிறுமிகள் பாலியல் வழக்கு; புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை
-
அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக கவனம்; இபிஎஸ் குற்றச்சாட்டு