2029 ஏப்ரல் முதல் பி.எஸ்.,-7 விதிகள் அமல்: மத்திய அரசு அதிரடி
புதுடில்லி: நாட்டில் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய பி.எஸ்.,-7 (BS-VII) மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை, வரும் 2029 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிஎஸ்-6 விதிகளுக்கு மாற்றாக, சர்வதேச தரத்திற்கு இணையாக இந்த புதிய விதிகள் மூன்று கட்டங்களாக அமலுக்கு வரவுள்ளன. முதல் கட்டம் 2029 ஏப்ரல் 1 முதல் தொடங்குகிறது. அடுத்தடுத்த கட்டங்கள் 2031 ஏப்ரல் மற்றும் 2035 ஏப்ரலில் அமல்படுத்தப்படும்.
பிரேக், டயர் தேய்மானத்திற்கும் கட்டுப்பாடு:
இதுவரை வாகனங்களின் வெளியேறும் புகைக்கு மட்டுமே வரம்புகள் இருந்த நிலையில், முதன்முறையாக பிரேக் தேய்மானத்தால் வெளியாகும் நுண்துகள்கள் மற்றும் டயர் உராய்வுக்கும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
2031 ஏப்ரல் முதல் எலக்ட்ரிக் வாகனங்களின் பிரேக் துகள் அளவு ஒரு கி.மீ-க்கு 3 மி.கி.,க்குள்ளும், மற்ற வாகனங்களுக்கு 7 மி.கி.,க்குள்ளும் இருக்க வேண்டும். 2035-ல் அனைத்து வாகனங்களுக்கும் இது ஒரே சீராக 3 மி.கி.,ஆக குறைக்கப்படும்.
இ.வி., பேட்டரிகளுக்கு கெடுபிடி:
மின்சார வாகனங்கள் (இ.வி.,) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களின் பேட்டரி ஆயுளுக்கு குறைந்தபட்ச தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 5 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ., வரை பேட்டரி திறன் 75 சதவீதம் குறையாமல் இருக்க வேண்டும். 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கி.மீ வரை குறைந்தபட்சம் 67 சதவீதம் திறன் நிலைத்திருக்க வேண்டும்.
களப் பரிசோதனை, பாஸ்போர்ட் கட்டாயம்:
ஆய்வக சோதனையுடன் நின்றுவிடாமல், சாலையில் ஓடும்போதும் உமிழ்வுத் தரம் பரிசோதிக்கப்படும். மேலும், வாகனத்தின் எரிபொருள் பயன்பாடு, பேட்டரி ஆரோக்கியம், மாசு அளவு ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள பிரத்யேக சுற்றுச்சூழல் வாகன பாஸ்போர்ட் வழங்கப்படும்.
மத்திய மோட்டார் வாகன விதிகள்-1989ல் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
துவங்குகிறது புதிய அத்தியாயம்; உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; பியூஷ் கோயல்
-
ரஷ்யாவுக்கு உதவுகிறது அமெரிக்கா!: உக்ரைன் குற்றச்சாட்டு
-
தசராவை முன்னிட்டு டில்லியில் உருவான 221 அடி உயர ராவணன் பொம்மை
-
இந்திய சட்டத்தை மதித்து நடந்தால் மட்டுமே ஸ்டார்லிங்க் சேவைக்கு அனுமதி: மத்திய அரசு திட்டவட்டம்
-
பாக்., எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி: இந்திய ராணுவம் உஷார்
-
கவுன்டரில் ரயில் டிக்கெட் எடுத்தாலும் இனி இன்சூரன்ஸ் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு