அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்

கடலுார்: கடலுார் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலுார் அரசு போக்குவரத்துக்க கழக பணிமனை எதிரில் நடந்து வரும் போராட்டத்தில் பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பொருளாளர் குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் பழனிவேல், சந்தானம், மாலைமணி முன்னிலை வகித்தனர். மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிவராமன் துவக்க உரையாற்றினார். தலைவர் முத்துக்குமரன், சம்மேளன துணை செயலாளர் முருகன், அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ., தலைவர் ராமமூர்த்தி கண்டன உரையாற்றினர். மருதவாணன், பால்கி, ஜெய்சங்கர், ராஜாங்கம் வாழ்த்தி பேசினர். போராட்டத்தில் ஆறுமுகம், தனபால், ராமலிங்கம், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். அரசாணை 123ன்படி மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏப்., 2026 முதல், ஓய்வு பெற்றோருக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பணப் பலன்களை வழங்க வேண்டும்.

2003ம் ஆண்டிற்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement