வி.எஸ்., பல்நோக்கு மருத்துவமனை தண்டையார்பேட்டையில் திறப்பு
சென்னை: வடசென்னை தண்டையார்பேட்டையில், வி.எஸ்., பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியன், நேற்று திறந்து வைத்தார்.
தண்டையார்பேட்டை, எஸ்.என்., சாலையில், 130 படுக்கை வசதிகளுடன், வி.எஸ்., பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவ குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.சுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி, மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில், வி.எஸ்.மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. வடசென்னை மக்களுக்காக, மூன்றாவது கிளையாக தண்டையார்பேட்டையில் தொடங்கி உள்ளோம்.
ஒருங்கிணைந்த புற்று நோய் சிகிச்சைகள், மேம்பட்ட சிறப்பு துறைகள் உள்ளன.
உயர் சிகிச்சைக்காக, நோயாளிகள் நீண்ட துாரம் பயணம் செய்வதை தவிர்க்கவும், சரியான நேரத்தில் உயர்தர சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யவதுமே எங்கள் நோக்கம்.
மே லும், மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை, பெண்களிடையே ஊக்குவிப்பதற்காக, இம்மாதம் முழுதும் மார்பக புற்றுநோய் பரிசோதனை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு எஸ்.சுப்பிரமணியன் கூறினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார்.
மேலும்
-
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
-
போதைப்பொருள் விற்பனை குறித்து புகார்; நேரலையின் போது சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ
-
சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் அராம்கோ தலைமையகம் மீது தாக்குதல்; தொடரும் பதற்றம்
-
தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம்; கரப்பான்பூச்சி அமைப்பினர் கைது
-
த.வெ.க., அரசின் ஒத்துழைப்பு குறைவால் பணிகள் மந்தம்; ஈரோடு எம்.பி., பேட்டி