கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

புதுச்சத்திரம்: வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூரை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுந்தரலிங்கம், 27; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி,54; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.

இதன் காரணமாக, கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு ஏற்பட்டு, கோவிந்தசாமி, சுந்தரலிங்கத்தை கத்தியால் வெட்டினார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 9 ம் தேதி, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த கோவிந்தசாமி, சுந்தரலிங்கம் வீட்டுக்கு சென்று, எனக்கு எதிராக சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிந்து கோவிந்தசாமி, 54; கைது செய்தார்.

Advertisement