தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்; திடீரென ஒலித்த அலாரத்தால் பரபரப்பு

-நமது நிருபர்-

வரும் அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. வீடுகள் , நிறுவனங்கள், அலுவகங்களில் தங்கள் தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பயன்படும் பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.

நாளை (அக்டோபர் 17) முதல் வரும் 20ம் தேதி வரை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலங்களில் இன்று ஆயுத பூஜை கொண்டபட்டது.

சென்னை தலைமைச் செயலத்தில் உள்ள ஆவண பிரிவில் ஊழியர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர். அப்போது பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர்.

கற்பூர புகையால், தீ பற்றினால் அடிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இந்த சம்பவத்தால் தலைமையச் செயலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement