பொறாமையில் துடிக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ் அறிக்கை;
ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில், தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் ஒருபோதும் கிடையாது. அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை, மக்களின் தேவைகளை தீர்க்க, வரிப்பணத்தில், ஆட்சியில் இருப்பவர்கள் திட்டங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைக்கு கொண்டு வருவர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அடுத்து வரும் அரசு, அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி, நடைமுறைக்கு கொண்டு வருவதில், என்ன பிழை இருக்க முடியும்?
கடந்த 2016 - 2021ல், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை, திமுக அரசின் முதல்வராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத்தார்; அமைச்சர்களும் திறந்து வைத்தனர். அவற்றை, தாங்களே சிந்தித்து செயல்படுத்தியதை போல விளம்பரமும் செய்தனர்.
தவெக அரசும், முந்தைய அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில், மக்கள் நலனுக்கானவற்றை தொடர்கிறது. குறைபாடுள்ள திட்டங்களை மேம்படுத்தி செயல்படுத்துகிறது. அதன்படி, கோவையில், அறிவுலகம் நுாலகத்தை, முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
ஆனால், அடிப்படை புரிதலே இல்லாமல், அதை, தானே சிந்தித்து, தான் ஒருவரே வடிவமைத்து, கட்டமைத்து செயல்படுத்தியதுபோல திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். பொறாமையில் துடித்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
அதிகம் அறிந்து கொள்; அச்சம் குறையும்; கோவையில் திறந்து வைத்த நூலக பதிவேட்டில் எழுதிய முதல்வர் விஜய்
-
ஸ்ரீரங்கம் கோயில் நிலம் பதிவு செய்ய தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இளைஞர் கொலை
-
முன் விரோதத்தால் வாலிபர் கொலை: மூவருக்கு ‘காப்பு’
-
‘மாயமான சிறுமி பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் சன்மானம்’: விழுப்புரம் மாவட்ட த.வெ.க., அறிவிப்பு
-
சப் – -கலெக்டர், தாசில்தாருடன் த.வெ.க., – எம்.எல்.ஏ., வாக்குவாதம்