மழை தொடர்வதால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலுார்:

கூடலுாரில் தொடரும் மழையால், நெற்பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கூடலுார், பந்தலுார் பகுதி விவசாயிகள் வயல் நிலங்களில் பருவமழை காலத்தில் நெல் விவசாயமும், கோடையில் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

நடப்பு ஆண்டு ஜூன் மாதம் பருவமழை ஏமாற்றிய நிலையில், ஜூலை மாதம் பெய்த பருவ மழையை தொடர்ந்து, மண்வயல், கம்மாத்தி, குணில், அள்ளூர்வயல் பகுதி விவசாயிகள் வயல்களில் நெல் பயிரிட்டனர்.

தொடர்ந்து, எதிர்பார்த்த பருவமழை பெய்யாததால், வெயிலில் தாக்கம் அதிகரித்து பாசன நீரின்றி வயல்களில வெடிப்ப ஏற்பட்டுள்ளது. இதனால், நெற்பயிரை பாதுகாக்க வழி இன்றி விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில், சில நாட்களாக பெய்து மழையை தொடர்ந்து நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நெற் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவக்குமார் கூறுகையில், ‘‘நடப்பு ஆண்டு, எதிர்பார்த்த பருவமழை பெய்யாமல் ஏமாற்றியதால், நெல் பயிரிட்டு வயல்களில் தண்ணீர் இன்றி, நெற்பயிர்கள் பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில், நெற்பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருப்பது நிம்மதி அடைய செய்துள்ளது,’’ என்றார்.

Advertisement