திறக்கப்படாத பம்ப் அறை அதிருப்தியில் உள்ளூர் மக்கள்
பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் குடிநீர் பம்ப் அறை கட்டி திறக்கப்படாமல் உள்ளதால், நிதி பயனில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே பிதர்காடு, 18குன்னு பகுதியில், குடிநீர் கிணறு மற்றும் மோட்டார் அறை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நிலையில், ஏற்கனவே கட்டப்பட்ட பம்ப் அறை, விரிசல் அடைந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், கடந்த 2024–-25ம் நிதியாண்டு, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 2.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பம்ப் அறை கட்டப்பட்டது.
தொடர்ந்து, ‘ஏற்கனவே, கட்டப்பட்ட பம்ப் அறையில் இருந்து, மின் இணைப்பை மாற்றம் செய்து புதிய அறையை செயல்படுத்த வேண்டும்,’ என, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் தீர்வு காணப்படவில்லை. எனவே, சேதமான அறை இடிந்து விழும் முன்னர் புதிய அறையை திறக்க வேண்டும்.
மேலும்
-
மாவட்ட கோகோ போட்டி திருவள்ளுவர் பள்ளி முதலிடம்
-
மாநில தடகள போட்டிக்கு பண்ருட்டி மாணவர்கள் தேர்வு
-
பெரிய கண்மாயில் ஆகாய தாமரை. ரூ. 20 லட்சம் செலவழித்தும் வீண்
-
நரிக்குடி புல்வாய்க்கரையில் 17ம் நூற்றாண்டு சதிக்கல்
-
சேதமான மடைகள்,வரத்து கால்வாய்கள், சிரமத்தில் சித்து மூன்றடைப்பு கண்மாய் விவசாயிகள்
-
துர்கா பூஜை, ராம்லீலா கொண்டாட்டம் கிழக்கு டில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடு