'ஆன்லைன்' விளையாட்டு: விழிப்புணர்வு முகாம்
ஊட்டி:
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆன்லைன் விளையாட்டு அடிமையால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து, விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆணைய உறுப்பினர் முனைவர் சாரங்கன் தலைமை வகித்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார்.
முகாமில், ‘ஆன் லைன்’ விளையாட்டின் தீமைகள் குறித்தும், இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அதில், ‘ஆன் லைன் சூதாடத்தை தடை செய்ய சட்டம் இயற்றி, அதற்கென தனி ஆணையத்தை அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கட்டமைத்த நாட்டின் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. கடந்த, 2019-–24 வரை, ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட பண இழப்பு மற்றும் அடிமைத்தனம் காரணமாக, 47 பேர் தற்கொலை செய்துகொண்டு நிலையில், 2025 –26 ஜூலை, 31 வரை இத்தகைய, சம்பவங்கள், 6 மட்டுமே நடந்துள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளை தவிர்த்து, கல்வியிலும், விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்,’ என, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அதில், ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி., கள் வசந்தகுமார், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உளவியல் துறை பேராசிரியர்கள் வெங்கடேஷ் மற்றும் மதன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மாவட்ட கோகோ போட்டி திருவள்ளுவர் பள்ளி முதலிடம்
-
மாநில தடகள போட்டிக்கு பண்ருட்டி மாணவர்கள் தேர்வு
-
பெரிய கண்மாயில் ஆகாய தாமரை. ரூ. 20 லட்சம் செலவழித்தும் வீண்
-
நரிக்குடி புல்வாய்க்கரையில் 17ம் நூற்றாண்டு சதிக்கல்
-
சேதமான மடைகள்,வரத்து கால்வாய்கள், சிரமத்தில் சித்து மூன்றடைப்பு கண்மாய் விவசாயிகள்
-
துர்கா பூஜை, ராம்லீலா கொண்டாட்டம் கிழக்கு டில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடு