கரூர் அருகே வெவ்வேறு இடங்களில் 3 பேர் விபரீத முடிவு

கரூர்:தான்தோன்றிமலை மற்றும் வெங்கமேட்டில் வெவ்வேறு பிரச்னை காரணமாக, மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர் தோரணகல்பட்டி சாலைப்புதுார் மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜாராம், 65. இவர், பல மாதங்களாக உடல் நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனம் உடைந்த ராஜாராம் கடந்த, 11ம் தேதி இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* கரூர், சுக்காலியூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி, 45. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், புற்று
நோய் பாதிப்பால், மனம் உடைந்த சுப்பிரமணி நேற்று முன்தினம், சுக்காலியூர் பிரிவு காட்டு பகுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
* கரூர் அருகே வெங்கமேடு கொங்கு நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 58; இவர், கடந்த சில நாட்களாக, மன உளைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement