ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

கரூர்:கரூர் அருகே, ஆர்ப்பாட்டத்தில் பொது வெளியில் பிரச்னையை துாண்டும் வகையில், பேசியதாக இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கடந்த, 11ம் தேதி காலை, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி, வெங்கமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாவட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் திருநாவுக்
கரசு, பொது வெளியில் பிரச்னையை துாண்டும் வகையில் பேசியதாக ஜெயக்குமார், 26; என்பவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வெங்கமேடு போலீசார் இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement