காணியாளம்பட்டி பாலிடெக்னிக்கில் 16ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
கரூர்;காணியாளம்பட்டி
பாலிடெக்னிக் கல்லுாரியில் வரும், 16ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு
முகாம் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட காணியாளம்பட்டி பாலிடெக்னிக்
கல்லுாரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும், 16
காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை தனியார் நிறுவனங்கள் சார்பில்,
வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 35க்கும் மேற்பட்ட தனியார் துறை
வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட
பணியிடங்களை நிரப்பவுள்ளனர்.
முகாமில், 8ம் வகுப்பு முதல்
பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள்
கலந்து கொள்ளலாம். மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள்,
தங்களுடைய சுய
விபர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை
ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள
வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள்,
ww.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரம் பெற, 04324--223555, 93452 61136, 94895 56361 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
-
மின் வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
-
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
-
கரூர் அருகே வெவ்வேறு இடங்களில் 3 பேர் விபரீத முடிவு
-
மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த வட மாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து