மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த வட மாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து
கரூர்:கரூரில்
மது அருந்த பணம் கேட்டு, தர மறுத்ததால் வட மாநில தொழிலாளியை
கத்தியால் குத்திய, இரண்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் அஜித் பாபு, 25,
இவர் வாங்கலில் தங்கியிருந்து, கரூர் சர்ச் கார்னரில் உள்ள,
எம்ராய்டரிங் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று
முன்தினம் மாலை, கரூர் வெங்கமேட்டை சேர்ந்த தினேஷ் குமார், 25; மனோஜ்,
25; ஆகியோர், எம்ராய்டரிங் கடைக்கு சென்று, அஜித்பாபுவிடம் மது
அருந்த பணம் கேட்டுள்ளனர். அப்போது, அவ்ர் பணம் தர முடியாது என
மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தினேஷ் குமார், மனோஜ்
ஆகியோர், அஜித் பாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தினர். அதில்,
காயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் தினேஷ்
குமார், மனோஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
-
காணியாளம்பட்டி பாலிடெக்னிக்கில் 16ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
-
மின் வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
-
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
-
கரூர் அருகே வெவ்வேறு இடங்களில் 3 பேர் விபரீத முடிவு