குடிநீர் தட்டுப்பாடு மக்கள் மறியல்

சத்தியமங்கலம்:தாளவாடிமலையில் உள்ள தாளவாடி பஞ்.,க்கு உட்பட்ட தொட்டகாஜனுார் கிராமத்தில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில மாதங்களாக இவர்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யவில்லை.

இதனால் அருகிலுள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். தோட்டங்களில் தற்போது போதிய தண்ணீர் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், தொட்டகாஜனுார்-சூசைபுரம் சாலையில் பெண்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாளவாடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போர்வெல் அமைத்து தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறவே, மறியலை கைவிட்டனர்.

Advertisement