அரசியல்வாதி, அரசியல் வியாபாரி என இரண்டு ரகம்: இ.பி.எஸ்., விமர்சனம்
சேலம்: அரசியலில், அரசியல்வாதி, அரசியல் வியாபாரி என இரண்டு ரகத்தினர் உள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே உள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, பழனிசாமி தலைமை வகித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சியில், ஒரு யூனிட் மின்சாரம், 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்த டெண்டரில் ஊழல் உள்ளதாக, அந்த டெண்டரை ரத்து செய்து விட்டு, தற்போது, 35 ரூபாய்க்கு த.வெ.க., அரசு கொள்முதல் செய்கிறது. செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால், இதை 'வெற்றி மெகா ஊழல்' திட்டம் என அழைக்கலாம்.
காங்., - வி.சி.க.,- முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தும், தாராபுரத்தில் 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளனர். த.வெ.க.,வை ஆதரிக்கும் கம்யூ., தலைவர்களே, இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறினர்.
'அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், எங்களுடன் வர உள்ளனர்' என த.வெ.க., அமைச்சர் ஆதவ் கூறுகின்றார். குதிரை பேரத்தை, சட்டசபையில் தொடங்கி, கிளை செயலர் வரை வந்து விட்டனர்; த.வெ.க.,வில் யாரும் இல்லை என தெரிகிறது.
அரசியலில் இரண்டு ரகத்தினர் உண்டு. ஒன்று அரசியல்வாதி, மற்றொன்று அரசியல் வியாபாரி. இதில் அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோர் இரண்டாம் ரகம்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, சில கருத்துகளை சொன்னார்; வரவேற்கிறோம். அக்கட்சி மேலும் வலிமை பெற, சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்ற கருத்தை நான் தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி, தமிழகம் வந்தபோது, கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் பெறுவது பற்றி, முதல்வர் விஜய் ஏன் பேசவில்லை?
பொதுப்பணித்துறையில் பல டெண்டர்களை ரத்து செய்து விட்டனர். இதனால் பல பணிகள் பாதியில் உள்ளன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால், இனி கூடுதல் விலையில் டெண்டர் வைக்க வேண்டும். இது ஒரு டம்மி அரசு. நிர்வாகத்திறமை அற்ற அரசாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (9)
Mani . V - Singapore,இந்தியா
16 அக்,2026 - 04:00 Report Abuse
ஏன் திமிங்கிலம், திருட்டு திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்த உம்மை எந்த ரகத்தில் சேர்ப்பது? 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
15 அக்,2026 - 23:22 Report Abuse
இன்னும் இரண்டு இருக்கு. அதாவது. சுய நல வெட்டி வீம்பு கொண்ட வாதி. கள். நன்றி கொன்ற நாற்காலியை விட மாட்டேனான்னு கால்லிய கெட்டியாக இரு காய்யாலும் பிடிச்சிக்கிட்டு விட மாட்டேனான்னு பிடிவாதம் பிடிக்கும் ஜாதி. 0
0
Reply
sanjay - ,
15 அக்,2026 - 22:10 Report Abuse
Tvk katchi seidha ore sadhanai Admk katchiyai vilaiku vangiyadhu dan.. otherwise only reels, vilambaram only .. Dmk 2.0 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
15 அக்,2026 - 18:03 Report Abuse
இரண்டுக்கும் இவர் நல்ல பொருத்தம் தான்! 0
0
Reply
R.P.ANANTHAN - pondicherry,இந்தியா
15 அக்,2026 - 17:58 Report Abuse
தாங்கள் என்ன ரெண்டும் கெட்டானா 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
15 அக்,2026 - 12:50 Report Abuse
அரசியல் வியாதி நீ. 0
0
Reply
சுபாஷ் - ,
15 அக்,2026 - 06:57 Report Abuse
இதில் இபிஎஸ் இரண்டாவது ரகம். இவர் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் இருந்த காலத்தில் காசு கொடுக்காமல் எந்த பயலையும் கையெழுத்து போட்டதில்லை, அது யாராக இருந்தாலும் சரி. 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement