பங்காரம் லஷ்மி கல்லுாரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி: பங்காரம் லஷ்மி கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மைத்துறை சார்பில் டிஜிட்டல் தலைமுறைக்கான நிதி விழிப்புணர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். இளங்கலை வணிகவியல் மாணவர் மணிகண்டன் வரவேற்றார். துறை தலைவர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
கருத்தரங்கில் கள்ளக்குறிச்சி சிட்டி யூனியன் வங்கி மேலாளர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை மாணவர் அம்ரித், நிகிஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் பேராசிரிர்கள் சந்தானராஜ், ரேகா, ராதிகா, சத்யா, லாவண்யா, ஷமீரா பானு, ரேஷ்மா உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.
மேலும்
-
ரயில் மோதி முதியவர் பலி
-
குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நகைகள் அணிவகுப்பு
-
பெண்களின் மனம் கவரும் கடலுார் அழகப்பா நகை மாளிகை
-
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம் :மாநகராட்சி மீது மக்கள் புகார்
-
போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
-
மேலாளரிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி செய்தவர் கைது