மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் நலதிட்ட உதவி வழங்கல்

சங்கராபுரம்: பரமநத்தம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 136 பயனாளிகளுக்கு 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலைக்டர் பத்மஜா வழங்கினார்.

சங்கராபுரம் அடுத்த பரபநத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. கலைக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா முன்னிலை வகித்தார்.வருவாய் கோட்டாச்சியர் முருகன் வரவேற்றார்.

முகாமில் கலெக்டர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று 7 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா,26 பேருக்கு பட்டா மாற்றம்,சமுக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 70 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவி,26 பேருக்கு புதிய ரேசன் கார்டு,தோட்டக்கலைதுறை சார்பில் 10 பேருக்கு தென்னங்கன்று உள்ளிட்ட 136 பயனாளிகளுக்கு 29 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஸ்குமார் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முடிவில் தாசில்தார் வைரக்கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement