குன்றத்து கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிகள் துவக்கம்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை நிர்வாகம் துவக்கி உள்ளது.
கோயிலில் கடந்தாண்டு வரை பஞ்சாமிர்தம் விற்பனை தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. கடந்தாண்டு ரூ. 31.14 லட்சத்துக்கு பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை ஏலம் போனது.
பஞ்சாமிர்த ஏலம் ரத்து
இக் கோயிலில் பிரசாதங்களை கோயில் நிர்வாகமே தயாரித்து விற்பனை செய்கிறது. இதுநோ, பஞ்சாமிர்தத்தையும் தயாரித்து விற்க புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு ஜூன் மாதம் உத்தரவிட்டது. அதன்படி பஞ்சாமிர்தம் விற்பனை ஏலம் ரத்து செய்யப்பட்டது.
அரசின் உத்தரவுப்படி கோயில் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்யவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் அதுவரை சோலைமலை முருகன் கோயிலில் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தை வாங்கி ஜூலை 1 முதல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சோலைமலை முருகன் கோயிலில் தயாரித்து விற்கும் பஞ்சாமிர்தம் அங்கு வரும் பக்தர்களுக்கே போதுமானதாக இருந்ததால், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தேவையான பஞ்சாமிர்தத்தை பெற முடியவில்லை. எனவே, இங்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அளவில் பஞ்சாமிர்தம் கிடைக்காததால் சில நாட்கள் பஞ்சாமிர்த விற்பனை தடைபட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சோலைமலை முருகன் கோயிலில் இருந்து மீண்டும் பஞ்சாமிர்தம் பெறப்பட்டு விற்பனை துவங்கியது.
டெண்டர் கோரும் பணிகள்
தற்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகமே பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணிகளை துவக்கியுள்ளது.
பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்க மூன்று நிறுவனங்களிடம் விலைப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் கற்பூரவல்லி வாழைப்பழம், கால் கிலோ, அரை கிலோ அளவில் பஞ்சாமிர்தம் அடைக்க லேபிள் ஒட்டிய டப்பாக்கள் சப்ளை செய்யவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தவிர பஞ்சாமிர்தம் தயாரிக்க தேவைப்படும் நாட்டு சக்கரை, கற்கண்டு, பேரிச்சம்பழம், தேன், ஏலக்காய், நெய் உள்ளிட்ட பொருள்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கோயில் நிர்வாகமே நேரடியாக கொள்முதல் செய்யவும் உள்ளது. விரைவில் பணிகள் முடிந்து கோயிலில் நிர்வாகமே பஞ்சாமிர்தம் தயாரித்து விநியோகம் செய்ய உள்ளது.
மேலும்
-
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் நலதிட்ட உதவி வழங்கல்
-
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
‘தினமலர்’ பவளவிழா கட்டுரை போட்டி புதுச்சேரி கல்லுாரி மாணவி முதலிடம்
-
கண்காணியுங்க பஸ்களில் பட்டாசு பார்சல்கள் அனுப்புவதை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்
-
ஆர்.எஸ்.மங்கலத்தல் போக்கு காட்டும் பருவ மழையால் விவசாயிகள் ஏமாற்றம்
-
அரசு மருத்துவமனையில் 10 பேருக்கு காது, மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை முதுகுளத்துார் டாக்டர்கள் சாதனை